மெம்பிஸில் பார்ட்டியில் பயங்கர துப்பாக்கி சூடு: 2 பலி, 6 பேர் காயம்!
அமெரிக்காவின் மெம்பிஸில் பார்ட்டியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் டென்னிசி(Tennessee) மாநிலம், மெம்பிஸில் (Memphis) சனிக்கிழமை இரவு நடைபெற்ற பார்ட்டியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
மெம்பிஸ் காவல்துறையினர் இரவு பார்ட்டியில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தில் பலர் துப்பாக்கி காயங்களுடன் கிடப்பதைக் கண்டனர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் அல்லது இதற்கான காரணம் குறித்து காவல்துறை இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |