அமெரிக்காவின் எல்லையோர மாகாணத்தில் பதற்றம்: குவிக்கப்படும் 1500 ராணுவ வீரர்கள்
அமெரிக்காவில் ICE அமைப்பினருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 1500 ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மினசோட்டா போராட்டத்தில் பரபரப்பு
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளால்(ICE) சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இப்பகுதியில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இதற்கிடையில் இன்றைய போராட்டத்தின் போது குடியேற்ற கொள்கைக்கு எதிராகவும், ICE படைகளுக்கு எதிராகவும் போராடும் எதிர்பாளர்களுக்கும், குடியேற்றக் கொள்கையை ஆதரிக்கும் நபர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன.

இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க கிட்டத்தட்ட 1500 ராணுவ வீரர்கள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் வீரர்கள்
நிலைமையின் தீவிரத் தன்மையை பொறுத்து அலாஸ்காவை தளமாக கொண்ட 11வது Airborne டிவிஷன் வீரர்கள் அவசர தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவசர நிலையில் வைக்கப்பட்டுள்ள வீரர்கள் எப்போது மினசோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |