தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி: சீனா கடும் கண்டனம்
தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி
தென்சீனக் கடலின் பெரும்பகுதியைத் தனது பிராந்தியமாக கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அப்பகுதிகளுக்கு உரிமை கோருவதால், சீனாவுக்கும் அந்நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
குறிப்பாக, பிலிப்பைன்ஸ் நாட்டு மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
தென்சீனக் கடலில் பதற்றம்
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தாலும், இரு நாடுகளும் அதனைப் பொருட்படுத்தாமல் கூட்டுப் போர் பயிற்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
நேற்று மீண்டும் தொடங்கிய கூட்டுப் போர் பயிற்சியில் அமெரிக்காவின் பி.1-பி குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் எஃப்.ஏ-50 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தி தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டுப் போர் பயிற்சி தென்சீனக் கடலில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |