எல்லையை தாண்டிய வெளிநாட்டு ராணுவ வீரர்: அதிரடி நடவடிக்கை எடுத்த வடகொரியா
உரிய அனுமதி இல்லாமல், தென் கொரியாவில் இருந்து வடகொரிய எல்லையை தாண்டிய அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் பாதுகாப்பு பகுதி
குறித்த நபர் இரு நாடுகளுக்கு நடுவே அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதியை பார்வையிட சென்றதாக கூறப்படுகிறது. பொதுவாக அமெரிக்க குடிமக்கள் தற்போதைய நெருக்கடியான சூழலில் வடகொரியா செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
@AFP
இதனிடையே, ராணுவர் வீரர் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, வட கொரியா இரண்டு சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அருகிலுள்ள கடலில் ஏவியது.
ஏவுகணை ஏவியதற்கும் ராணுவ வீரர் கைதுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது மர்மமாகவே உள்ளது. ஆனால் ஏவுகணை வீசப்பட்டது குறித்து தென் கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.
திரும்பி வரும் நம்பிக்கை
மேலும், அந்த நபர் வடகொரியாவில் தஞ்சமடைந்துள்ளாரா அல்லது திரும்பி வரும் நம்பிக்கையில் அந்த நாட்டு எல்லையை தாண்டினாரா என்பது குறித்து தகவல் இல்லை.
@AP
மட்டுமின்றி, வடகொரியா தரப்பிலும் மெளனம் சாதிக்கின்றனர். இதனிடையே, வடகொரியாவில் கைதான வீரரின் பெயர் டிராவிஸ் கிங் எனவும், 2021 ஜனவரியில் இருந்து அவர் ராணுவத்தில் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவரை விடுவிக்கும் பொருட்டு அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தைகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |