தங்கக் கட்டிகளுக்கு வரி விதித்த அமெரிக்கா - சுவிட்சர்லாந்து கடும் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் தங்க ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், அமெரிக்கா புதிதாக தங்கக் கட்டிகளுக்கு வரி விதிக்க தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, 1 கிலோ மற்றும் 100 அவுன்ஸ் அளவிலான தங்கக் கட்டிகளுக்கு இறக்குமதி வரியை விதிக்கத் தொங்கியுள்ளதால், இது உலக தங்க சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 31 அன்று அமெரிக்க சுங்கத்துறை (US Customs and Border Protection) வெளியிட்ட தீர்மானத்தின்படி, இத்தகைய தங்கக்கட்டிகள் வரிக்கு உட்பட்ட வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தங்கக்கட்டிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த வரிவிலக்கை அமெரிக்கா அதிரடியாக நீக்கியுள்ளது.
இந்த மாற்றத்தால் சுவிட்சர்லாந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். உலகின் மிகப் பாரிய தங்க சுத்திகரிப்பு மையமான சுவிட்சர்லாந்து, அமெரிக்காவிற்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இருக்கிறது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் சுமார் 61.5 பில்லியன் டொலர் மதிப்பிலான தங்கத்தை அமெரிக்காவிற்கு சுவிட்சர்லாந்து ஏற்றுமதி செய்துள்ளது.
புதிய வரிவிதிப்பின் தாக்கத்தால், இப்போது அதே மதிப்பிலான தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்கு சுமார் 24 பில்லியன் டொலர் வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சில சுவிஸ் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கத்தை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளன. மற்ற நிறுவனங்கள் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரிவிலக்கு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன.
சமீபத்தில், சுவிட்சர்லாந்தின் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளது. இது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பாதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Swiss Gold Exports, US Gold Tariffs, US Swiss Gold Trade, Swiss Gold Bars, Switzerland Gold, Gold Bar Import Tax, Gold Price Surge