நர மாமிசம் சாப்பிட வைக்க திட்டமிட்ட குடும்பத்தினர்: இளைஞர் செய்த கொடூர செயல்
அமெரிக்காவில் குடும்பத்தினர் நர மாமிசம் சாப்பிட வைக்க திட்டமிட்டதால், அவர்களை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தை கொன்ற இளைஞர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது சொந்த குடும்பத்தினரை கொலை செய்த குற்றத்திற்காக, சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
சீசர் ஓலால்டே என்ற அந்த 18 வயது இளைஞர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் 5 வயது சகோதரன் முதற்கொண்டு, அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
@facebook
கடந்த மே 23ஆம் திகதி ஒரு நபர் பொலிஸாரிடம், தான் தற்கொலை செய்ய போவதாக போனில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
@Bowie County Jail
இளைஞர் இருந்த வீட்டில் மொத்த குடும்பமும் கொல்லப்பட்டு, சடலமாக கிடந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், சீசரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நர மாமிசம் சாப்பிடும் குடும்பம்
இந்நிலையில் சீசரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவரது மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஓலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
@facebook
மேலும் சீசர் தனது குடும்ப உறுப்பினர்களை அவர்களது அறைகளில் வைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் ஒவ்வொருவராக இழுத்து வந்து குளியலறையில் போட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@kmss
இதனிடையே பொலிஸார் நடத்திய விசாரணையில், தனது குடும்பத்தினர் நர மாமிசம் உண்ண கூடியவர்கள் என்றும், அவர்கள் தன்னை சாப்பிட வைக்க திட்டமிட்டதால் தான் கொலை செய்தேன் என்றும், இளைஞர் வாக்குமூலம் கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.