பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்... ஈரான் தொடர்பில் இந்தியாவுக்கு மிரட்டல்
ஈரானின் சபஹர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் இந்தியா பொருளாதாரத் த்டைகளை எதிர்கொள்ள நேரிடும் எனறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானும் இந்தியாவும்
எந்த ஒரு நாடும் ஈரானுடன் தொழில் ரீதியாக நெருங்கினால், பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், சபஹர் துறைமுகம் தொடர்பில் ஈரானும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதை அமெரிக்கா அறிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சபஹர் துறைமுகம் ஒப்பந்தம் குறித்தும் ஈரான் உடனான இருதரப்பு உறவு தொடர்பாகத் தனது சொந்த வெளிவிவகாரக் கொள்கைகளை இந்திய அரசு தான் விளக்க வேண்டும் என்று வெளிவிவகாரத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடைகள்
மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தற்போதும் அமுலில் உள்ளது. மேலும், ஈரானுடன் தொழில் ரீதியாக நெருங்கும் எவரும் பொருளாதாரத் தடைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளவெண்டும் என்றும் வேதாந்த் படேல் விளக்கமளித்துள்ளார்.
சபஹர் துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகள் நிர்வகிக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் இடையே தெஹ்ரானில் நேற்று கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |