போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண் - நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.6 கோடிக்கு போலி நகைகளை வாங்கி அமெரிக்க பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
ரூ.6 கோடிக்கு போலி நகை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் உள்ள ஒரு கடையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற செரிஷ் என்பவர் தங்க பாலிஷுடன் வெள்ளி நகைகளை வாங்கியுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் இந்த நகைகள் காட்சிப்படுத்தப்பட்டபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது.
உடனே அமெரிக்காவில் இருந்து செரிஷ் என்ற பெண் இந்தியாவிற்கு சென்று, கடை உரிமையாளரை சந்தித்துள்ளார்.
கடை உரிமையாளர் தனது குற்றச்சாட்டுகளை நிராகரித்தமையால், குறித்த பெண் ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
அதன் பின்னரே அவர் அமெரிக்க தூதரகத்தின் உதவியையும் நாடி, குறித்த விடயத்தை விசாரிக்க வேண்டும் என ஜெய்ப்பூர் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.
நடந்தது என்ன?
2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் குறித்த கடை உரிமையாளரிடம் அப்பெண் தொடர்புக்கொண்டுள்ளார்.
விசாரணையில் கடைக்காரர்கள் மோசடி செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, கடை உரிமையாளரும் அவருடைய தந்தையும் தப்பியோடியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி சான்றிதழை தயாரித்து, விற்கப்பட்ட நகைகள் உண்மையானது என்று பெண்ணை நம்ப வைத்துள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |