ஊபர் டிரைவரை தவறாக நினைத்து அவசரப்பட்ட பெண்
Uber டிரைவர் தன்னை கடத்தியதாக நினைத்து பெண் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸில் ஜூன் 16-ம் திகதி இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. ஃபோப் கோபஸ் (Phoebe Copas) என்ற 48 வயது பெண், ஊபர் டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவை (Daniel Piedra Garcia) சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில் ஃபோப் கோபஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலனை பார்க்க Uber புக் செய்துள்ளார்
கென்டக்கியை பூர்வீகமாக கொண்ட கோபஸ், தனது காதலனை பார்க்க டெக்சாஸ் வந்துள்ளார். கோபாஸ் வேலைக்குப் பிறகு தனது காதலனைச் சந்திக்கவும், உள்ளூர் கேசினோவுக்குச் செல்லவும் ஊபரை புக் செய்துள்ளார். பயணத்தின் போது, கோபாஸ் மெக்சிகோவின் ஜுவாரெஸ் என்று எழுதப்பட்ட ஊர் பெயர்பலகையை பார்த்ததும், தான் மெக்சிகோவிற்கு கடத்தப்பட்டதாக தவறாக நினைத்துள்ளார்.
Pictures: GoFundMe/El Paso Police Department
இதனால், கோபாஸ் தன்னிடமிருந்த ரிவால்வரை எடுத்து பீட்ரா கார்சியாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பீட்ரா கார்சியா தலையின் பின்புறம் மற்றும் மணிக்கட்டில் சுடப்பட்டார். இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பொலிசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன், கோபஸ் தனது காதலனுக்கு புகைப்படங்கள் படத்தை அனுப்பியுள்ளார்.
தவறாக நினைத்து அவசரப்பட்ட பெண்
ஆனால் பொலிஸார் நடத்திய விசாரணையில் பீட்ரா கார்சியா கோபாஸால் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. கோபாஸ் செல்லும் இடத்தை விட்டு காரை வேறு எங்கும் திருப்பவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். உபெர் செயலியில் உள்ள ரூட் மேப் படி பீட்ரா கார்சியா ஓட்டினார் என்றும் அவரது மனைவி கூறினார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பீட்ரா கார்சியா ஆபத்தான நிலையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
Credit: Piedra's family
கொலைக் குற்றச்சாட்டு
இதன் மூலம் ஃபோப் கோபஸ் மீது பொலிஸார் கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக, பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும், கொலை முயற்சிக்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், கோபாஸ் 1.5 மில்லியன் டொலர் பத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று எல் பாசோ காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Picture: LinkedIn
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து Uber நிறுவனம் பதிலளித்துள்ளது. பயணிகளின் செயல் அதிர்ச்சியாகவும், அச்சமாகவும் இருப்பதாக ஊபர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊபர் இயங்குதளத்தில் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், ஓட்டுனர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் Uber தெரிவித்துள்ளது. சம்பவத்தின் சூழ்நிலைகள் தெரிந்தவுடன் Phoebe Copass பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் Uber ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Uber Driver, Texas
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |