ரஷ்யாவால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் : கதிகலங்க வைக்கும் டைம் ட்ராவலர் கணிப்பு!
ரஷ்யாவால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என்று டைம் ட்ராவலர் கணித்து கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைம் ட்ராவலர் கணிப்பு
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பல ஆண்டுகளுக்கு முன் பாபா வங்கா, நாஸ்டர் டாமஸ் போன்ற பல கணிப்புகளை கூறியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகும்.
அந்த வகையில், தற்போது டைம் ட்ராவலர் எதிர்காலம் குறித்து சொல்லும் கணிப்புகளுக்கு பலர் அவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கமான @theradianttimetravellerல் மூன்றாம் உலகப்போர் எப்போது எப்படி ஏற்படும் என்று கணித்து கூறி கதிகலங்க வைத்துள்ளார்.
மூன்றாம் உலகப் போர்
வரும் 2025ம் ஆண்டு இறுதியில் நேட்டோ நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 3ம் உலகப் போர் ஏற்படும் என்று கணித்து கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரான் டிசாண்டிஸ் வருவார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இவர் கணித்து கூறியுள்ள அமெரிக்க அதிபர் மற்றும் மூன்றாம் உலகப்போர் குறித்த எனோ அலரிக் வெளியிட்டுள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் கதி கலங்கியுள்ளனர். இன்னும் சிலர் இவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். இப்படித்தான் 2023ம் ஆண்டு வேற்று கிரக வாசிகள் வருவார்கள் என்று கூறினார். சான்பிரான்சிஸ்கோவில் 750 அடி உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டு 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று கூறினார் அது எதுவுமே நடக்கவில்லை. இவர்கூறுவதையெல்லாம் யாரும் நம்பாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |