ஆபாச படமெடுக்கும் சொகுசு கப்பல்: போதைப் பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல்
ஆபாச படங்கள் எடுக்கும் சொகுசு கப்பலில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆபாச படமெடுக்கும் சொகுசு கப்பல்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நன்டூகெட் என்ற தீவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது படகில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இறக்கப்படுவதை பார்த்து, பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் சொகுசு கப்பலில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், வார இறுதியில் பார்ட்டிகளுக்கு பிறகு கப்பலில் ஆபாச படங்கள் எடுக்கப்படுவதாகவும் அந்த பெண் தகவல் அளித்தார்.
அதனடிப்படையில் கப்பலில் சோதனை நடத்திய பொலிஸார், அங்கிருந்து போதைப் பொருட்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் போன்றவற்றை கைப்பற்றினர்.
அத்துடன் ஆபாச படம் எடுக்கும் வகையிலான படுக்கையறையும் கப்பலில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட உரிமையாளர்
இந்நிலையில் கப்பலின் உரிமையாளர் ஸ்காட் புர்கே கடந்த வாரமே போதைப் பொருள், ஆயுத கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் தன்மீது மேலும் கூடுதலாக சுமத்தப்பட்டுள்ள புகார்களை ஸ்காட் புர்கே மறுத்துள்ளார். அத்துடன் 69 வயதாகும் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சிறையில் தன்னை அடைத்தால் தன்னுடைய நிலைமை மேலும் மோசமாகும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |