சீறிப்பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்: ISIS அமைப்பின் தளங்களை தகர்த்தெறிந்த அமெரிக்கா
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளங்கள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
ISIS தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக சிரியாவில் உள்ள ISIS தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ஹாக்கைய் ஸ்டிரைக்(Operation Hawkeye Strike) என்ற பெயரில் ISIS இலக்குகள் மீது அமெரிக்கா இந்த பிரம்மாண்ட தாக்குதலை நடத்தியுள்ளது.
கிடைத்துள்ள தகவல்கள் படி, கிட்டத்தட்ட 70 ISIS தளங்கள் அமெரிக்க படைகளின் தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கப்பட்ட இந்த தாக்குதல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும், ISIS அமைப்பின் எஞ்சிய உள்கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அமெரிக்காவின் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கி படைகள் ஆகியவை நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |