புடினின் நெருங்கிய நண்பரின் மனைவி மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா
கோடீஸ்வரரும், புடினின் நெருங்கிய நண்பருமான போரிஸ் ரோட்டன்பெர்க்கின் மனைவி மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
தடைகளை நீக்கியதாக அமெரிக்க கருவூலத் துறை
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் போரிஸ் ரோட்டென்பெர்க். இவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார்.
2014ஆம் ஆண்டு, ரஷ்யா உக்ரைனின் கிரிமியா பகுதியை இணைத்த பிறகு விதிக்கப்பட்ட தடைகளின் கீழ் இவர் தொடர்ந்து இருக்கிறார்.
ஆனால், சமூகப் பெண்மணியான இவரது மனைவி கரினா ரோட்டென்பெர்க் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை நீக்கியதாக அறிவித்துள்ளது.
2022யில் உக்ரைன் மீது முழு அளவிலான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, கரினா மீது விதிக்கப்பட்ட தடைகள் தற்போது ஏன் நீக்கப்பட்டுள்ளன என்பதற்கான விளக்கத்தை அந்தத் துறை வழங்கவில்லை.
அமெரிக்க பாஸ்போர்ட்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கரினா பிறந்திருந்தாலும், அவருக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருப்பதாக 2023யில் OCCRP கூறியது.
அதாவது, கரினாவின் அமெரிக்க குடியுரிமை அவர் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்குரிய இடத்தில் வைக்கப்பட்டது என்று OCCRP தெரிவித்தது. இதனால், கணவர் போரிஸ் இடமிருந்து பணம் பெறுவது கரினாவுக்கு கடினமாக இருந்தது.
இதற்கிடையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டிய பல ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அதே நாளில் அமெரிக்க கருவூலம் தடைகளை விதித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |