விசா முடிந்தும் வெளியேறாவிடில் நாடு கடத்தல், நிரந்தர தடை! இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
விசா காலம் முடிந்தும் வெளியேறாத இந்தியர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்த தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அரசு எச்சரித்துள்ளது.
45 லட்சம் பேர் இந்தியர்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய விதிகளை அமுல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, வெளிநாட்டு விசா தொடர்பில் பல மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார். அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 45 லட்சம் பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தற்போது ட்ரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு கடத்தப்படுவார்கள்
அதாவது, விசா காலம் முடிந்தும் அமெரிக்காவைவிட்டு வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள். இந்தியர்களை குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ்தள பக்கத்தில், "நீங்கள் (இந்தியர்கள்) அனுமதிக்கப்பட்ட தங்கியிருக்கும் காலத்திற்குப் பிறகும் அமெரிக்காவில் தங்கினால், நீங்கள் நாடு கடத்தப்படலாம். மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு நிரந்தரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடு கடத்தலுக்கும், விசா முடிந்ததும் வெளியேறாத இந்தியர்கள் மீண்டும் நுழைய தடைக்கும் ஆளாவார்கள் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |