கணவருக்கு கத்திக்குத்து..!3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சிய மனைவி
தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் காரை ஏரி ஒன்றினுள் தாய் பாய்ச்சிய சம்பவம் அமெரிக்காவின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனுக்கு கத்திக்குத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சென்று கொண்டு இருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று திடீரென ஏரிக்குள் பாய்ந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
அப்போது, குடும்ப தகராறு காரணமாக மனைவி கணவரை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய 8,9, மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சியது தெரியவந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரையும் உடனடியாக மீட்க முடிந்தது.
மனைவி கைது
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளில் ஒரு குழந்தை தீவிரமான சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Wei Fen Ong (Source: Carrollton Police)
கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த கணவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மனைவியை பொலிஸார் கைது செய்து, வன்முறைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |