உத்தரகாண்ட் மாநில ஆற்றங்கரையில் வெடித்த டிரான்ஸ்பார்மர்: மின்சாரம் பாய்ந்த 15 பேர் பலி!
வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள மின்மாற்றி கம்பம் வெடித்ததில் மின்சாரம் தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி 15 பேர் பலி
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் பிபால்கோட்டி கிராமத்திற்கு அருகே உள்ள அலக்நந்தா ஆற்றுப் படுக்கையில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 15 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகளின் தகவல் படி, உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 5 ஊர்க் காவலர்களும் அடக்கம் என தெரியவந்துள்ளது.
மேலும் 15 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்து மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#UPDATE | People injured due to electrocution at the under-construction Namami Gange project on the banks of the Alaknanda River in Chamoli have been brought to AIIMS Rishikesh by helicopter for treatment. pic.twitter.com/IN2TtlahZA
— ANI (@ANI) July 19, 2023
விபத்து தொடர்பாக சாமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர தோபால் வழங்கிய தகவலில், விபத்து நேற்று இரவு நடந்து இருப்பதாகவும், ஆனால் புதன்கிழமை அதிகாலையில் தான் தகவல் பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
NDTV செய்தி நிறுவனத்தின் தகவல்படி, பிபால்கோட்டி கிராமத்திற்கு அருகே உள்ள அலக்நந்தா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்சாரம் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது.
21 பேர் பாதிப்பு
முதலில் வாட்ச்மேன் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கிராமத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, அப்போது காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது 21 பேர் மின்சாரம் தாக்கி விழுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
AKHILESH KUMAR
அதில் 15 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்ட நிலையில், மற்றவர்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர தோபால் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |