10 நாட்களுக்கு பின் கிடைத்த உணவு! சுரங்கத்தில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கிய பணியாளர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சுரங்கப்பாதை 4.5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அமைப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ஆம் திகதி திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
அப்போது பணியாளர்கள் 41 பேர் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கினர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் விரைந்தனர்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A
— ANI (@ANI) November 21, 2023
வைரல் வீடியோ
தற்போது உள்ளே சிக்கிய பணியாளர்களை மீட்கும் பணி 10வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள பணியாளர்களின் என்னவென்றே தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அவர்களிடம் வாக்கி-டாக்கி மூலம் மீட்புக்குழுவினர் பேசும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆறு அங்குல குழாய் மூலம் கமெரா ஒன்று இடிபாடுகள் வழியாக அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
PTI
மேலும், பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் உணவின்றி தவித்து வந்தனர். அவர்களுக்கு 10 நாட்கள் போராட்டத்திற்கு பின் குழாய் வழியாக உணவு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அத்துடன் அவர்களின் குடும்பத்தினருக்கு இது ஆறுதலாக அமைந்துள்ளது.
முன்னதாக, இதுதொடர்பாக பேசிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலாளர்,
'இன்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில், தொழில்நுட்ப ஆலோசனையின் அடிப்படையில் பல்வேறு வழிகள் ஆராயப்பட்டன. மேலும், அவற்றில் 5 வழிகள் பின்பற்றப்பட உள்ளன' என தெரிவித்தார்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |