வேலையை விட்ட சில தொழிலாளர்கள் .., 41 பேர் சிக்கிய உத்தரகாண்ட் சுரங்கப்பணி மீண்டும் தொடங்குமா?
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களில் சிலர் வேலையை விட்டதால், மீண்டும் சுரங்கப்பணிகள் தொடங்கப்படுமா அல்லது தாமதமாகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
வீடு திரும்பிய தொழிலாளர்கள்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அங்கு, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே மூடியது.
இவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பரிசோதனை முடிந்தவுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
சுரங்கப்பணிகள்
இந்நிலையில், சுரங்கம் தோண்டும் பணிகள் மீண்டும் தொடங்குமா அல்லது தாமதாகுமா என்று தொழிலாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். நிலச்சரிவு போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று உறவினர்கள் கூறியதால் சில தொழிலாளர்கள் வேலையை விடுவதற்கு முடிவெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
சில தொழிலாளர்கள் வேலை வேண்டாம் என்று விடுப்பு கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இன்னும் சிலர் பணி தொடங்கினால் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், தாமதமானால் வீட்டுக்கு சென்று வருகிறோம் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், சுரங்கப்பணிகள் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு குறித்த அனுமதி பெற்ற பிறகே பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |