சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள்:தொழில்நுட்பம் தோற்ற நிலையில் கைகளால் துளையிடும் மீட்புக்குழுவினர்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கம் ஒன்றிற்குள் 41 தொழிலாளர்கள் 17 நாட்களாக சிக்கிக்கொண்டுள்ள நிலையில், இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் அனைவரும் மீட்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பம் தோற்ற நிலையில் கைகளால் துளையிடும் மீட்புக்குழுவினர்
சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி 17 நாட்களாக தொடரும் நிலையில், அமெரிக்க தொழில்நுட்பக் கருவிகள் கருவிகள் கூட முழுமையாக பணியை நிறைவேற்ற முடியாத நிலையில், கடைசியில் மீட்புக் குழுவினர் கைகளால் மண்ணைத் தோண்டி வழி ஏற்படுத்தும் ஒரு நிலை ஏற்பட்டது.
தயாராக நிற்கும் ஆம்புலன்ஸ்கள்
17 நாட்களாக சுரங்கத்திற்குள் இருந்ததால், ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமானால் அல்லது வெளியே வந்ததும் உணர்ச்சிவசப்படும் நிலையில் அவர்களுடைய உடல் நிலையை கவனித்துக்கொள்வதற்காகவும், அடிப்படை மருத்துவப் பரிசோதனைக்காகவும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் 41 ஆம்புலன்ஸ்கள் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளுடனும் தயாராக இருக்கின்றன.
இன்னும் சிறிது நேரத்தில்...
இந்நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் வெளியே கொண்டுவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நான்கு ஆம்புலன்ஸ்கள் சுரங்கத்துக்குள் செல்லத் தயாராக உள்ளன என்பதால், ஓரளவு நல்ல உடல் நிலையில் இருந்தால், ஒரு ஆம்புலன்சுக்கு இரண்டு தொழிலாளர்களையும், பாதிப்பு ஏதாகிலும் இருந்தால், ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு ஒரு தொழிலாளியையும் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வரமுடியும் என்பதால், முதலில் நான்கு முதல் எட்டு தொழிலாளர்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியே கொண்டுவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |