ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான், இஸ்ரேல் மோதல் குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை
இஸ்ரேல், ஈரான் மோதல் குறித்து வேதனை தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரானின் மோதலினால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வந்த அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் துணை நிற்க மாட்டோம் என தெரிவித்தது.
ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க முயன்றால், மத்திய கிழக்கில் தொடங்கும் மோதல் உலகப்போர் ஆக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல், ஈரான் போரை ஐ.நா நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ்தள பதிவில், ''இஸ்ரேல் மீது ஈரானும், ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக் கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன. உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. உலகு தாங்காது, நிறுத்துங்கள் போரை. ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்'' என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரானும்
— வைரமுத்து (@Vairamuthu) April 15, 2024
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன
உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது
உலகு தாங்காது
நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம் pic.twitter.com/IFdAJv5wT9
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |