இந்தி திணிப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள அது குழந்தையின் முத்தமா? கவிஞர் வைரமுத்து காட்டம்
இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித் ஷாவின் பேச்சு
தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து கண்டனங்களை பெற்றது.
அனைவரும் இந்தி மொழியை எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்காரணத்தைக் கொண்டும் இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது, மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என கூறினார்.
வைரமுத்து கேள்வி
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இந்தி திணிப்பு குறித்து கூறுகையில், 'தமிழர்கள் இந்தி எதிர்ப்பு உணர்வில் அல்லாமல், இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வில் திளைத்தவர்கள்.
இந்தியை எதிர்ப்பது, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதில் தமிழர்கள் தெளிவாக உள்ளனர். எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |