தக்காளியை பாதுகாக்கும் பவுன்சர்கள் வீடியோ வைரல்! வியாபாரி கைது
இந்தியாவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள்:
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் இந்த சம்பவம் நடைபெற்று வீடியோ வெளியானதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள காய்கறி விற்பனையாளரான அஜய் யாதவ் என்பவர், கடையில் இரண்டு பவுன்சர்களை நிறுத்தினார்.
भाजपा टमाटर को ‘Z PLUS’ सुरक्षा दे. pic.twitter.com/k1oGc3T5LN
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 9, 2023
இதுகுறித்து அவர் கூறும் போது,"தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், எங்கள் கடைக்கு வருபவர்கள் தக்காளி விலையில் பேரம் பேசும் போது வாக்குவாதம் ஏற்படுகிறது. அதனை தடுப்பதற்கே பவுன்சர்களை நியமித்துள்ளேன். மேலும், பவுன்சர்கள் மாலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பர்' என்றும் அவர் கூறினார்.
தக்காளி வியாபாரி கைது:
அஜய் யாதவ் காடையில் காய்கறி வியாபாரம் செய்யும் ஜக்நாராயண் யாதவ் மற்றும் அவரது மகன் விகாஸ் யாதவ் மற்றும் கடைக்காரர் ராஜ் நாராயண் ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தக்காளி பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்த அஜய் யாதவ் மற்றும் இரண்டு பவுன்சர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். அஜய் யாதவ், தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 140-160க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும், பவுன்சர்களை எவ்வளவு சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தினார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இது தொடர்பான வீடியோவை உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |