தாய்லாந்தில் அழகி பட்டம் வென்ற இளம்பெண் அதிரடி கைது
வியட்நாமைச் சேர்ந்த அழகிப்பட்டம் வென்ற இளம்பெண் போலி விளம்பரத்தில் நடித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
சர்வதேச அழகிப்போட்டி
கடந்த 2021ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச அழகிப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர் நுயென் துக் துய் டியின் (Nguyen Thuc Thuy Tien).
அழகி பட்டம் வென்றதால் பல முன்னணி நிறுவனங்கள் நுயென் துக்கை அணுகியுள்ளன. பின்னர் அவர் பல நிறுவனங்களின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். அவர் விளம்பரப்படுத்திய ஊட்டச்சத்து மருந்து பெருமளவில் விற்பனையானது.
அதாவது, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த மருந்தை வாங்கி பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், மருந்தின் தரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிரடி கைது
இதன் காரணமாக அதனை ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்தபோது, அதில் 16 மில்லி கிராம் நார்ச்சத்து இருந்தது தெரிய வந்தது.
முதலில் 200 மில்லி கிராம் நார்ச்சத்து நிறைந்த மருந்து என விளம்பரப்படுத்தப்பட்டது. அதனை நம்பியே பலரும் வாங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதுடன், போலி விளம்பரத்தில் நடித்ததாக நுயென் துக் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |