கோல்டன் விசாவை அறிமுகப்படுத்திய ஆசிய நாடு: இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி
வியட்நாம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 10 ஆண்டு கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வியட்நாம் சுற்றுலா
ஆசிய நாடுகளில் ஒன்றான வியாட்நாம் (Vietnam) தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோல்டன் விசா திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் நீண்ட கால சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, இந்த 10 ஆண்டு கோல்டன் விசா திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியர்கள் மிகவும் விரும்பும் பயண நாடுகளில் ஒன்றாக வியாட்நாம் உருவெடுத்துள்ளதாக, அந்நாட்டின் தேசிய சுற்றுலா ஆணையம் கூறுகிறது.
அதாவது, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023யில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், குறுகிய கால சுற்றுலா தலத்தில் இருந்து சர்வதேச பார்வையாளர்களுக்கான நீண்டகால மையமாக தனது பிம்பத்தை மாற்ற வியாட்நாம் இந்த 'கோல்டன் விசா' திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
கோல்டன் விசா
விசா வைத்திருப்பவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்த வியாட்நாம் திட்டமிட்டுள்ளது. இது வெளிநாட்டு பார்வையாளர்களை அதிகரிக்கவும், பொருளாதார உறவுகளை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டதாகும்.
எனினும், கோல்டன் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதற்கான தகுதி அளவுகோல்கள் தெளிவாக இல்லை.
ஆனாலும், தென் கிழக்கு ஆசியாவில் நிரந்தர தளத்தைத் தேடும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள், தொழில்முனைவோர், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் டிஜிட்டல் நாடோடிகளுக்கு நீட்டிக்கப்பட்ட தங்குமிடத்தை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |