விஜய் யாரென்று தெரியாமல் வணக்கம் வைக்கும் பாட்டி... சிரித்துக் கொண்டே நிவாரண பொருட்களை வழங்கும் விஜய்
தமிழக மாவட்டமான நெல்லையில் கனமழையால் பாதித்த மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நெல்லையில் விஜய்
தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர்.
வைரலாகும் பாட்டியின் வீடியோ
இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நடிகர் விஜய்சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலம் வந்தார்.
Aiyooo cute uhhhh??❤️ #NellaiWelcomesTHALAPATHY @actorvijay pic.twitter.com/9WlOs82J5H
— PrayushKhanna? (@prayushkhanna12) December 30, 2023
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அங்கு, வரிசையாய் வந்த பொதுமக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அப்போது அங்கு வந்த பாட்டி ஒருவர் விஜய் யாரென்று தெரியாமல் ஆள் மாறி அருகில் இருந்தவர்களுக்கு வணக்கம் வைத்தார். இதைப் பார்த்து நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், நான் தான் விஜய் என்று கூறி அவரே நிவாரண பொருட்களை பாட்டி கையில் வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |