மகளிர் தலைமையில் அணியை உருவாக்கிய விஜய்.., புது யுக்தியை கையாளுகிறாரா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், உறுப்பினர் சேர்க்கை பணிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
நிர்வாகிகள் நியமனம்
இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay pic.twitter.com/8odlQmHg9H
— TVK Vijay (@tvkvijayhq) March 7, 2024
மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.
உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என்.யாஸ்மின், மாநிலப் பொருளாளராக கோவையை சேர்ந்த சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில துணைச் செயலாளர்களாக மதுரையைச் சேர்ந்த விஜய் அன்பன் கல்லணை, சென்னையை சேர்ந்த எம்.எல்.பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அணி விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |