நடிகர் அஜித்திற்கு நடுவில் விஜய்.., ரசிகர்கள் வைத்த தவெக பேனர் வைரல்
தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில் ரசிகர்கள் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விஜயின் பேனர் வைரல்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிற கட்சிகளை போலவே விஜயும் தனது கட்சியை வலுப்படுத்துகிறார்.
கட்சி தொடங்கிய பின்னர் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார்.
அதேபோல அடுத்த மாநாடும் வரும் 21-ம் திகதி அன்று மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பாரபத்தியில் நடத்தவுள்ளார் விஜய்.
இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் விஜய்க்காக பேனர் அடித்து மாநகர் பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.
அதில், நடிகர் அஜித் நடித்து பெரும் வெற்றி பெற்ற படங்களின் புகைப்படங்களுக்கு நடுவே விஜய் இருக்கும்படியான பேனர் ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். இதனை வைத்ததும் அஜித் ரசிகர்கள் தானாம்.
அதில் மதுரை மாநாடு ரெடி மாமே என்றும் எதிர்கால தமிழ்நாடு என்ற வசனமும் இடம்பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |