விஜய் அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிக்க மாட்டார்! அப்டேட் கொடுத்த மக்கள் இயக்க நிர்வாகி
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வருகிறாரா விஜய்?
கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழா நடைபெற்றது.
சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற விழாவில், நடிகர் விஜய் 1600 மாணவ, மாணவிகளுக்கு நின்று பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார். தொகுதி வாரியாக மாணவ மாணவர்களை தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியது அரசியலுக்கு வர ஆயத்தமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
மேலும் விழாவில் பேசிய விஜயின், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது.
அரசியலுக்கு எண்ட்ரியானால் படத்திற்கு நோ:
இந்நிலையில், மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் என 300 பேர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளிய வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர்,"அரசியலுக்கு நீங்கள் வந்தால் இளைய தலைமுறைக்கு மாற்றம் வரும் எனக் விஜயிடம் கூறினோம். அதற்கு அவர், சிரிப்புடன் சென்று விட்டார்' என பேட்டி அளித்துள்ளார்.
Heartwarming Video of our Thalapathy VIJAY 🫶🏻 Antha manasu than sir Kadavul ❤️ #LEO #LeoFilm #BloodySweet #Thalapathy68 @actorvijay
— Actor Vijay Team (@ActorVijayTeam) July 11, 2023
pic.twitter.com/IuWOXjQoid
மற்றொரு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர்,"விஜய் அரசியலுக்கு வந்தால் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். தனது கவனம் முழுவதும் அரசியலில் மட்டுமே இருக்கும் என விஜய் கூறியதாக" அவர் பேட்டி அளித்துள்ளார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வருவதற்கு அணைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம்.அவர் கை காட்டினால் அரசியலில் ஈடுபடுவதோடு அவருடன் பயணிப்போம் எனவும் கூறியுள்ளார்.
எலெக்ஷன்க்கு நாங்கள் எல்லாம் ரெடி.. விஜய் க்ரீன் சிக்னல் மட்டும் காட்டினால் போதும் என்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |