72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடல் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கேப்டன் அவர்களின் பூத உடல் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
Hindutamil
கேப்டன் அவர்களின் இந்த இறுதிப் பயணமானது தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நிறைவு அடைந்துள்ளது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது.
விஜயகாந்தின் நல்லடக்கம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களின் பெரும் திரளான கூட்டத்தால் இறுதிச் சடங்கு தாமதம் ஆகியுள்ளது.
Hindutamil
இதற்கிடையில் இறுதிச் சடங்கு நடைபெறும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijayakanth, DMDK, Tamil Nadu,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |