விஜயகாந்த் மறைந்த சில நாட்களிலேயே ட்விட்டர் கணக்கு பெயர் மாற்றம்.., நெட்டிசன்கள் விமர்சனம்
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு பிரபலங்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
மேலும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயாகாந்தின் இல்லத்திற்கு சென்று அங்குள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைதள கணக்கு மாற்றம்
இந்நிலையில், சமூக வலைதளமான விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கின் பெயரானது அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அந்த கணக்கில், 'தேமுதிக பொதுச் செயலாளர் w/o புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த டிசம்பர் 14 -ம் திகதி தேமுதிக பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
கேப்டன் விஜயகாந்த் மறைந்த சில நாட்களிலேயே அவரின் சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |