மோடிக்கு உருக்கத்துடன் கடிதம்! விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்த வீராங்கனை
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசு வழங்கிய விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார்.
துஷ்பிரயோக குற்றச்சாட்டு
இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துஷ்பிரயோக நடவடிக்கை எடுக்காததால், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் இளம் வயதிலேயே ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.
PTI
அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளித்தது பரபரப்பை கிளப்பியது.
இதன் எதிரொலியாக பிரிஜ் பூஷனின் உறவினர் சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை இந்திய அரசு ரத்து செய்தது.
Kind Courtesy Bajrang Punia/Instagram
வினேஷ் போகத் உருக்கம்
இந்த நிலையில், சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவாக மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தும் தனது அர்ஜுனா மற்றும் தயான்சந்த் கேல் ரத்னா விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'நாட்டிற்காக வாங்கப்பட்ட இந்த பதக்கங்களை எல்லாம் திரும்ப வழங்க வேண்டுமா, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Getty Images
File Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |