மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: தந்தை, மகன் என 3 பேர் சுட்டுக்கொலை
இந்திய மாநிலம் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஷ்ணுபூர் மாவட்டம்
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை புதிதாக வன்முறை வெடித்துள்ளது.
அம்மாவட்டத்தின் உகா தம்பாக் கிராமத்தில் அதிகாலை வேளையில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறின.
இந்த தாக்குதலில் தந்தை - மகன் மற்றும் கிராமவாசி ஒருவர் என 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு நீட்டிப்பு
கொல்லப்பட்ட மூவரும் மைத்தேயி இனமக்கள் எனவும், குகி மக்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் வன்முறை தொடங்கியதால் மணிப்பூரில் உள்ள 8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |