நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியை குளத்தில் தூக்கிவீசிய ஊழியர்கள்! சுவாரசிய வீடியோ
நோபல் பரிசை வென்ற ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானியை சக ஊழியர்கள் குளத்தில் தூக்கி வீசி கொண்டாடியுள்ளனர்.
ஒருவர் முனைவர் பட்டம் பெறும் போது அவர் குளத்தில் தூக்கி வீசப்படுவது பாரம்பரியம் என கூறப்படுகிறது.
அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய தனது கண்டுபிடிப்புகளுக்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஸ்வாண்டே பாபோ, கொண்டாட்டமாக அவரது சக ஊழியர்களால் ஒரு குளத்தில் வீசப்பட்டார்.
ஜேர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டில் இந்த கொண்டாட்டங்கள் நடந்தன, அங்கு பாபோவின் சக ஊழியர்கள் அவருக்கு நோபல் விருதுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தபோது இது நடந்தது.
"நாங்கள் முற்றிலும் பரவசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்" என்று மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அவரது அறிவியல் வெற்றிக்கு பழமையான பாரம்பரியம் இல்லாமல் வாழ்த்துகள் முழுமையடையாது என்பதற்காக அவரை குளத்தில் தூக்கி எறிந்து கொண்டாடியுள்ளனர்.
நோபல் பரிசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
ஒரு தனி நபர் முனைவர் பட்டம் பெறும் போது அவர் குளத்தில் தூக்கி வீசப்படும் ஒரு பாரம்பரியம் பொதுவான வழக்கமாக இருப்பதாக நோபல் பரிசு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Our new medicine laureate Svante Pääbo made a splash when his colleagues at @MPI_EVA_Leipzig threw him into a pond. Normally throwing a colleague into the pond happens when somebody receives a PhD, and they wanted to do it for Pääbo's #NobelPrize as well.
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2022
Video: Benjamin Vernot pic.twitter.com/SaHAxfwRID
What better way to celebrate your #NobelPrize than being grabbed by your colleagues & thrown into your Institute's pond??At #MedicineNobelPrize Winner Svante Pääbo's @MPI_EVA_Leipzig, scientific success is traditionally celebrated w/ a quick *voluntary* bath!??@maxplanckpress pic.twitter.com/IMnMgPsexx
— Max Planck Society (@maxplanckpress) October 4, 2022