சூடான் தலைநகரில் ஏற்பட்ட மோதலினால் சேதமடைந்த பகுதிகள்: வெளியான அதிர்ச்சியூட்டும் வீடியோ
சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஏற்பட்ட போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில், எடுக்கப்பட்ட வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரில் வெடித்த மோதல்
சூடான் தலைநகரான கார்ட்டூமில் ராணுவப்படை மற்றும் துணை ராணுவப்படையினருக்கு இடையே ஏற்பட்ட போரில், அந்நகரம் பாரிய இழப்பை சந்தித்துள்ளது.
@afp
இரு ராணுவப்படையினரும் பீரங்கிகள் மற்றும் வான்வெளி தாக்குதல் மீது தாக்குதல் நடத்தின.
இதனால் நாடே பெறும் அபாயத்தில் சூழ்ந்துள்ளது, நிறைய உயிரிழப்புகளும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
@afp
இந்தநிலையில் நகரின் பெரும் பகுதிகள் பெரும் சேதத்திற்கு ஆளாகியுள்ளன, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே கொஞ்ச காலமாகும் என்ற சூழல் நிலவுகிறது.
அதிர்ச்சியூட்டும் வீடியோ
சூடானின் ராணுவப்படை மற்றும் துணை ராணுவப்படையினுக்கு இடையே ஏற்பட்ட போரில் 427 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3700 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
بحري ? pic.twitter.com/jkqh3jlme9
— حسنه الگنزي (@AllanziHusna) April 24, 2023
மேலும் அங்கு வாழும் வெளிநாட்டினர் சிலரும் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்திருக்கின்றனர். இப்போருக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை போருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் கார்டூமினின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட சேதங்களையும், கட்டிடங்கள் இடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் அந்நாட்டினை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.