பட்ஜெட் திருமணத்தில் ஜீன்ஸ் மற்றும் பிளேட் சட்டை: மணப்பெண்ணின் வைரல் வீடியோ
மேற்கு விர்ஜினியாவில் நடந்த ஒரு வித்தியாசமான பட்ஜெட் திருமணம், சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
கவனத்தை ஈர்த்த திருமணம்
மேற்கு விர்ஜினியாவில் 22 வயதான ஏமி பரோன், 24 வயதான ஹண்டரை ஜனவரி மாதம் ஒரு பொது நூலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த எளிமையான திருமணத்தில், மணப்பெண் ஜீன்ஸ் மற்றும் பிளேட் சட்டை அணிந்து இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, 20 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த திருமணத்தின் பட்ஜெட் $1,000 டொலருக்குள் இருந்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
பாரம்பரிய ஆடைகளைத் தவிர்த்து, மணமக்கள் இருவரும் ஜீன்ஸ் மற்றும் பிளானல் சட்டைகளை அணிந்திருந்தனர்.
🚨 BRIDE IN JEANS LOSES FRIENDS & FAMILY
— Irrelevant News (@IrrelevantFeed) March 21, 2025
Her viral budget wedding in denim and plaid sparked backlash—and apparently un-RSVPs from half her life.
Love isn’t canceled, but the guest list sure was. pic.twitter.com/JkD7bxosKR
இந்த திருமணத்தின் முக்கிய அம்சம் பொருளாதார சிக்கனமாகும். இதில் புகைப்படத்திற்கு $480 டொலர்களையும், கவ்பாய் பூட்ஸுக்கு $300 டொலர்களையும் ஒதுக்கியிருந்தனர்.
சமூக ஊடக பதிவு
ஏமி பாரோன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ வைரலானது. அதில் "என் சிறந்த நண்பரை திருமணம் செய்து ஒரு வாரம் ஆகிறது. இந்த தருணத்தை திரும்பத் திரும்ப பார்த்து கொண்டே இருக்கிறேன்" என்று அவர் வீடியோவில் கூறினார்.
"நாங்கள் வழக்கமாக இப்படித்தான் உடை அணிவோம்" என்று ஜீன்ஸ் மற்றும் பிளேட் சட்டை அணிந்ததற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார்.
இருப்பினும், இந்த வீடியோவிற்கு சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தன. வைரலானதால் எதிர்மறையான கருத்துக்கள் வந்ததாக ஏமி பாரோன் ஒப்புக்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |