ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயம் காரணமாக விராட் கோலி விலகல்
காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 13ம் திகதி முதல் ஜூன் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தசை பிடிப்பு காரணமாக தொடருக்கு முன்னதாகவே அணியில் இருந்து விலகியுள்ளார்.

2026ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தார்.
போட்டிக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டிஸ்டல் செமிமெம்ப்ரானோசஸ் தசை கிழிவு(distal semimembranosus tendon tear) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத காயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வீரர் யார்?
காயம் காரணமாக விராட் கோலி விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக எந்த வீரரை பிசிசிஐ பரிந்துரைக்கும் என்பது இன்னும் தெரியவரவில்லை.

அத்துடன் ஜூலை 14 முதல் 19ம் திகதி வரை நடைபெற இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது உடல் தகுதியும் இந்திய அணிக்கு தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |