கனடாவை தவிர்க்கும் இந்திய மாணவர்கள்... விசா வழங்குவதில் சாதனைப் படைத்த நாடு
கனடா மற்றும் இந்தியா இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், மாணவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கனடாவை தவிர்த்து
பொதுவாக இந்திய மாணவர்கள் கல்விக்கு என கனடாவையே பெரும்பாலும் நாடி வந்த நிலையில், அந்த நாட்டின் காலிஸ்தான் ஆதரவு நிலை புதிய சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் கனடாவுக்கான விசா வழங்குவதையும் இந்தியா நிறுத்தி வைத்தது. தற்போது விசா வழங்குவதை முன்னெடுத்து வந்தாலும், புதிதாக பல்கலைக்கழக கல்வியை நாடும் மாணவர்கள் தற்போது கனடாவை தவிர்த்து அமெரிக்காவை நாடுவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையில் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 140,000 என தெரிய வந்துள்ளது. இது சாதனை எண்ணிக்கை என்றே கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 140,000 க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை வழங்கியுள்ளன என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள்
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையில் சர்வதேச அளவில் 10 மில்லியன் விசாக்களை அமெரிக்கா விநியோகித்துள்ளது. மட்டுமின்றி, 2015க்கு பின்னர் முதல் முறையாக வணிகம் மற்றும் சுற்றுலாவுக்காக கிட்டத்தட்ட எட்டு மில்லியன் விசிட் விசாக்களை அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது.
அத்துடன் 2017க்கு பின்னர் 600,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் விநியோகித்துள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
கடந்த ஆண்டு 1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளனர், இது உலகின் மிகவும் வலுவான பயண உறவுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உலகளவில் விசா விண்ணப்பித்தவர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் எனவும், இதில் மாணவர் விசா விண்ணப்பதாரர்கள் 20 சதவீதம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |