திடீரென ஊடகவியலாளர்கள் சந்திப்பை ரத்து செய்த புடின்: உடல்நிலை மோசமாகியிருக்கலாம் என அச்சம்
ரஷ்ய ஜனாதிபதி புடின், கடைசி நேரத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமாகியிருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
வருடாந்திர ஊடகவியலாளர்கள் சந்திப்பு
பொதுவாக, ஆண்டின் இறுதியில் ஒரு பெரிய ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்துவார் புடின். அது டிசம்பர் மாதம் 14ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் நடுவில் நடைபெறும்.
ஆனால், இம்முறை அந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெறாது என கிரெம்ளின் வட்டாரம் நேற்று அறிவித்தது.
Image: Getty Images
எழுந்துள்ள சந்தேகங்கள்
திடீரென ஊடகவியளாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் பல சந்தேகங்கள் உருவாகியுள்ளன.
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே தொடர்ச்சியாக புடினுக்கு உடல்நிலை சரியில்லை என செய்திகள் வெளியாகிவந்த நிலையில், தற்போது கடைசி நேரத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், புடினுடைய உடல்நிலை மோசமடைந்திருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அத்துடன், உக்ரைன் போரில் ரஷ்யா தோல்விகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பலாம் என்பதால், அதை தவிர்ப்பதற்காகவும் புடின் ஊடகவியலாளர்கள் சந்திப்பை ரத்து செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Image: Kremlin.ru/east2west news