புடின் ஆதரவு சூனியக்காரி கைது: ரஷ்யாவும் உக்ரைனும் சரமாரி குற்றச்சாட்டுகள்
ரஷ்ய ஜனாதிபதிக்கு மிகவும் பிடித்த சூனியக்காரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ரஷ்யாவும் உக்ரைனும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதிக்கு மிகவும் பிடித்த சூனியக்காரி
அல்யோனா போலின் (Alyona Polyn, also known as Elena Sulikova, 44), என்னும் பெண், ரஷ்ய ஜனாதிபதிக்கு மிகவும் பிடித்த சூனியக்காரி ஆவார்.
புடினின் கைகளை வலுப்படுத்துவதற்காக சூனியக்காரிகள் கூட்டம் ஒன்றை முன்னின்று நடத்தியவர் இந்த போலின்.
அத்துடன், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதையும் ஆதரித்துள்ள போலின், புடினுடைய எதிரிகள் மீது சூனியம் வைப்பவரும் ஆவார்.
Image: Social media/east2west newss
புடின் ஆதரவு சூனியக்காரி கைது
ஆனால், தற்போது புடின் உத்தரவின் பேரிலேயே போலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Image: social media/ East2west News
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், உக்ரைன் தரப்பும் போலின் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளது.
Image: POOL/AFP via Getty Images
போலின் ரஷ்ய உளவுத்துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும், உக்ரைன் ராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாகவும் உக்ரைன் தரப்பு போலின் மீது குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |