காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்ட காதலன்: இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்
மத்திய அமெரிக்க நாடான குவாதிமாலாவில், தன் காதலிக்கு சர்ப்ரைஸாக புரபோஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் ஒருவர்.
ஆனால், காலத்துக்கும் மறக்கமுடியாத வகையில் அங்கு நிகழ்ந்த ஒரு விடயம், இணையத்தில் வைரலாகிவருகிறது.
காதலன் கொடுத்த சர்ப்ரைஸ்
ஜஸ்டின் லீ என்பவர், குவாதிமாலா நாட்டில் எரிமலை ஒன்றின் முன் தனது காதலியான மார்கனுக்கு புரபோஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இருவரும் எரிமலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மார்கனுக்குப் பின்னால் நின்ற ஜஸ்டின் திடீரென முழங்காலிட்டு மோதிரம் ஒன்றை எடுத்து நீட்டி தன் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அதை சற்றும் எதிர்பாராத மார்கன் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்
அப்போது, திடீரென ஒரு விடயம் நிகழ்ந்தது. ஆம், சரியாக ஜஸ்டின் புரபோஸ் செய்யவும், அவர்களுடைய பின்னணியில் இருந்த அந்த எரிமலை திடீரென நெருப்பை உமிழத் துவங்கியது.
அந்தக் காட்சி, பார்ப்பதற்கு அவர்களுக்கு இயற்கை சர்ப்ரைஸ் கொடுத்தது போல் அமைந்திருந்தது.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், இது ஒரு நல்ல அடையாளம், உங்கள் திருமண வாழ்க்கையை நீங்கள் துவங்கலாம் என்பதற்கு இயற்கையே அளிக்கும் ஆசீர்வாதம் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துவரும் பலரும் மார்கன் ஜஸ்டின் ஜோடியை மனதார வாழ்த்திவருகிறார்கள்.
இயற்கையே தங்களை வாழ்த்திய அந்த தருணத்தை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |