வாக்னர் கூலிப்படை தலைவரின் உயிருக்கு ஆபத்து! அதிகரிக்கும் பதற்றம்
வாக்னர் கூலிப்படையின் முன்னாள் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரின் மறைவிடம் தற்போது அம்பலமாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படை கலைப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை முன்னெடுத்த வாக்னர் கூலிப்படை, இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டது.
அத்துடன் இருதரப்பினரும் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில், வாக்னர் கூலிப்படையை கலைத்துவிடவும், அதன் தலைவராக செயல்பட்டு வந்த யெவ்கெனி ப்ரிகோஜின் பெலாரஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் முடிவானது.
east2west news
ஆனால், யெவ்கெனி ப்ரிகோஜின் எங்கே செல்லவிருக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நடந்த கிளர்ச்சி தொடர்பில் யெவ்கெனி ப்ரிகோஜின் தன்னிலை விளக்கம் அளிக்கும் வரையில், அவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
அந்த தன்னிலை விளக்கத்தில், மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சி ஏன் பாதியில் கைவிடப்பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில், ரஷ்ய ஜனாதிபதியை நீக்கும் முனைப்புடன் எங்கள் கிளர்ச்சி முன்னெடுக்கப்படவில்லை. மாறாக வாக்னர் கூலிப்படைக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என்பதாலையே மாஸ்கோ புறப்பட்டு சென்றதாக யெவ்கெனி ப்ரிகோஜின் விளக்கமளித்துள்ளார்.
@getty
முக்கிய தலைவர்கள் இழைத்த தவறுகள்
அத்துடன், உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் கொத்தாக கொல்லப்படுவதற்கு முக்கிய தலைவர்கள் இழைத்த தவறுகள் தான் காரணம் என்பதை சுட்டிக்காட்டவும் தான் இந்த பேரணி என்றார்.
இருப்பினும், யெவ்கெனி ப்ரிகோஜின் நாடுகடத்தப்பட வேண்டும் என்றே முடிவானது. இந்த நிலையில் பெலாரஸின் Minsk நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ராணுவ விமானத் தளத்தில் உள்ளூர் நேரப்படி ஜூன் 26 பகல் அவரது விமானம் தரையிறங்கியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து வணிக ரீதியான விமானம் ஒன்று தரையிறங்குவதற்கும் 18 நிமிடங்கள் முன்பு யெவ்கெனி ப்ரிகோஜின் பயணித்த விமானமானது தரையிறங்கியதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ப்ரிகோஜின் உயிருடன் இருப்பது
மேலும், அந்த ரஷ்ய வணிக ரீதியான விமானத்தில் யார் பயணித்தார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. யெவ்கெனி ப்ரிகோஜின் பயன்படுத்தும் விமானமானது Embraer Legacy 600 என்பதாகும்.
Wikipedia
இதன் இயந்திரமானது Rolls Royce நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் 289 விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கத்தில் உள்ளது. இதன் விலை 9 மில்லியன் பவுண்டுகள் என கூறுகின்றனர்.
ஆனால், இது ஏற்கனவே பயன்படுத்திய விமானம் என்றும், புதிதாக நிறுவ செலவாகும் தொகை தொடர்பில் எந்த தரவுகளும் இல்லை என்றே கூறுகின்றனர்.
இதனிடையே, யெவ்கெனி ப்ரிகோஜின் உயிருடன் இருப்பது தமது உயிருக்கு அச்சுறுத்தலாக விளாடிமிர் புடின் கருதலாம் எனவும், இதனால் அடுத்த சில மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |