பொதுமக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள், அழைப்புக்கு காத்திருக்கபோவதில்லை! வாக்னர் தலைவர் பரபரப்பு தகவல்
பெல்கோரோட் பிராந்தியத்தில் நடப்பதை தடுக்கவில்லை என்றால், நிச்சயமாக நாங்கள் ரஷ்ய நிலத்தைப் பாதுகாக்க வருவோம் என வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.
பெல்கோரோட்
ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுக்க உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனில் இருந்து ஆயுதம் ஏந்திய ஊடுருவலுக்குப் பிறகு வந்த சில நாட்கள் தாக்குதல்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் தென்மேற்கு பெல்கோரோடில் உள்ள கிராமங்களை விட்டு வெளியேறினர்.
Lev Borodin/TASS
இதற்கிடையில், ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட வாக்னர் படையில் 5 பேர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்ததாக அதன் தலைவர் பிரிகோஜின் முன்பு ரஷ்யாவை குற்றம்சாட்டியிருந்தார்.
வாக்னர் தலைவர் தகவல்
இந்நிலையில், உக்ரைனின் எல்லையை ஒட்டிய ரஷ்ய பெல்கோரோட் பகுதிக்கு போராளிகளை அனுப்பத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'பாதுகாப்பு அமைச்சகம் எதிர்காலத்தில், பெல்கோரோட் பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தடுக்கவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் ரஷ்ய நிலத்தைப் பாதுகாக்க வருவோம்.
The Manila Times
பெல்கோரோட்டில் பொதுமக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு போராளிகளை நிலைநிறுத்த அழைப்புக்கு காத்திருக்கப்போவதில்லை' என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாக்முட்டை விட்டு தனது போராளிகள் வெளியேறியதாக தெரிவித்த வாக்னர், தற்போது மாஸ்கோவின் இராணுவத் தலைமையால் பெல்கோரோட்டைப் பாதுகாக்க முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.