ரஷ்யாவிடம் ஆயுதங்களை ஒப்படைத்த வாக்னர் கூலிப்படை: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன!
வாக்னர் கூலிப்படை தங்களது ஆயுதங்களை ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
களைக்கப்பட்ட வாக்னர் கூலிப்படை
உக்ரைன் ரஷ்யா இடையே இதுவரை நடைபெற்ற மிக நீண்ட போர் சண்டையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அதன் வாக்னர் கூலிப்படை அமைப்பு செயல்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் போர் களத்தில் ரஷ்ய ராணுவத்திற்கும், வாக்னர் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வாக்னர் கூலிப்படை வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
AP
இந்த கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதுடன், வாக்னர் கூலிப்படையும் உடனடியாக களைக்கப்பட்டது, அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரிகோஜின் நேரில் சந்தித்தாக மாஸ்கோ செய்தி தொடர்பாளர் அறிவித்து இருந்தார்.
எப்படி இருப்பினும் அவரது நிலை குறித்த விவரங்கள் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. அதே சமயம் வாக்னர் படையில் இருந்த வீரர்கள் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு அந்த நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reuters
ஆயுதங்கள் ஒப்படைப்பு
இந்நிலையில் வாக்னர் கூலிப்படை தங்களிடம் உள்ள போர் ஆயுதங்களை ரஷ்ய ராணுவத்திடம் முழுமையாக ஒப்படைத்து இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில், டாங்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், கனரக பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற 2000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
அத்துடன் 2,500 மெட்ரிக் டன் வெடி பொருட்களும், 20,000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி புடினை பிரிகோஜின் நேரில் சந்தித்து இருந்த நிலையில், அடுத்தகட்டமாக வாக்னர் படைகள் ரஷ்ய ராணுவத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு பெலாரஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமா அல்லது சேவைகளில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா என்பதை வாக்னர் படை முடிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |