வைர சுரங்கங்கள், தனி விமானம்... பல பில்லியன் பவுண்டுகளுக்கு அதிபதியான வாக்னர் கூலிப்படை தலைவன்
ரஷ்யாவில் தற்போது வாக்னர் கூலிப்படையானது கலைக்கப்பட்டு, அதன் தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் நாடு கடத்தப்பட்டாலும், பல பில்லியன் சொத்துக்களுக்கு அவர் அதிபதி என்றே கூறப்படுகிறது.
துரோகி என கட்டாய நாடு கடத்தல்
கொடூர படைத்தலைவனான யெவ்கெனி ப்ரிகோஜின் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்த காரணத்தால் துரோகி என கட்டாய நாடு கடத்தலுக்கு இலக்கானார்.
Credit: East2West
தற்போது அவர் தொடர்பிலான சொத்துக்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளது. யெவ்கெனி ப்ரிகோஜினுக்கு சொந்தமாக சொகுசு விமானம் ஒன்றும், ஆடம்பர படகு மற்றும் வைர சுரங்கமும் இருப்பதாக கூறுகின்றனர்.
உண்மையில் முறைகேடான அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான் ப்ரிகோஜின் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படை செயல்படும் நாடுகளில் இருந்து வைரம், தங்கம், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை கொள்ளையடிப்பதே இவர்களின் இன்னொரு தொழில்.
Credit: East2West
2 பில்லியன் பவுண்டுகள்
ப்ரிகோஜினின் தனிப்பட்ட சொத்து மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு மட்டும் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து சுமார் 1.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒப்பந்தங்களை வாக்னர் கூலிப்படை பெற்றுள்ளதாக விளாடிமிர் புடினே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், St Petersburg நகரில் அமைந்துள்ள வாக்னர் கூலிப்படை தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 38 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அமெரிக்க டொலர் உட்பட பல்வேறு நாடுகளின் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
@AP
அத்துடன் தங்கக் குவியல், போலி கடவுச்சீட்டுகள் என பல்வேறு தரவுகளையும் மீட்டுள்ளனர். இருப்பினும், விளாடிமிர் புடினால் ஆதரித்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தான் இந்த வாக்னர் கூலிப்படை.
4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை
தற்போது புடினுக்கு பயந்து நாள் ஒன்றிற்கு 50 பவுண்டுகள் கட்டணத்தில் 3 நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் யெவ்கெனி ப்ரிகோஜின் தங்கியிருக்கிறார். மேலும் அவர் மீது தேசத்திற்கு துரோகம் விளைவித்ததாக கூறி வழக்கும் பதியப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வாக்னர் கூலிப்படைக்கு தொடர்புடைய அல்லது நிதியுதவி அளித்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@AP
ஐக்கிய அரபு நாடுகள், மத்திய ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் செய்படும் நான்கு நிறுவனங்களே வாக்னர் கூலிப்படை தொடர்பில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |