தொடையில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய பயிற்சிகள்
பொதுவாக சில பெண்களுக்கு தொடையில் அதிகப்படியான தசைகள் அசிங்கமாக காணப்படுவதுண்டு.
இதனை எளிய முறையில் ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
கார்டியோவஸ்குலர் பயிற்சி
தொடையில் உள்ள சதையை குறைக்க கார்டியோவஸ்குலர் பயிற்சி என்பது மிகவும் சிறந்ததாகும்.
இது தொடை தசையைத் தவிர முழு உடலை குறைக்கவும் பயன்தரும். இதற்கு ஒரு நாளைக்கு அரைமணி நேரம் செலவழித்தாலே போதும். தொடர்ந்து செய்து வர உடலில் கீழ்பாகம் குறையும்.
ஜாக்கிங்
இந்த பயிற்சியை தொடர்வதால் தசையை குறைக்க உதவுவதுடன் தொடை ஷேப் பெறவும் பயன்படுகிறது. ட்ரட்மில்லில் ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்வதை விட சமமான தளத்தில் வெளியில் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் மூச்சினையும் சீர் செய்யும்.
ஸ்குவாட்ஸ்
தசைகளை குறைக்க, மற்றும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்திடலாம். சேர், ஸ்டெப் போன்ற பயிற்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இவை தொடையில் உள்ள தசையை குறைக்க உதவுவதுடன் கால்களுக்கு வலுவூட்டவும் செய்திடும்.
ஆக கொழுப்பை கரைக்க வெறுமனே உணவினை மட்டும் குறைத்தால் போதாது. சத்தான ஆகாரங்கள் அதே நேரத்தில் சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமானதாகும்.
ஏரோபிக் உடற்பயிற்சி
ஏரோபிக்ஸ் கால்களுக்கு மட்டுமல்ல முழு உடலுக்கு நல்லதாகும். முழு உடலுக்கு கொழுப்பை குறைக்க உதவிடும். இதுவும் கால்களுக்கு வலுவூட்டும் என்பதால் தொடை தசை குறைந்திடும். நடைபயிற்சி மேற்கொள்வது, படிகள் ஏறிச்செல்ல லிஃப்ட் பயன்படுத்தாமல் இருப்பது, நடனம் ஆகியவை இவற்றில் சேர்ந்திடும்.
இந்த பயிற்சியை குறைந்தது ஒரு நாளைக்கு 45 நிமிடங்களாவது நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
லெக் கிக்
தொடையின் தசையை குறைக்க இது மிகவும் எளிமையான பயிற்சி ஆகும். ஒரு சேரின் பின்புறம் நின்று கொள்ளுங்கள். அந்த சேரை சப்போர்டிவாக பிடித்துக் கொண்டு முதலில் எவ்வளவு தூரம் காலை பின்னோக்கி தூக்க முடியுமோ தூக்க வேண்டும்.
மெதுவாக தூக்கக்கூடாது. பின்னால் வேகமாக எத்த வேண்டும். இதே போல அடுத்தக்கால் இப்படியே மாறி மாறி செய்திட வேண்டும். குறைந்தது 20 முறை இப்படிச் செய்திடலாம்.