இறுகும் போர் நெருக்கடி... பல்வேறு நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு போர் தொடுக்கும் அபாயம் இறுகிவரும் நிலையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் வசிக்கும்
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதாகவே தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. ஏற்கனவே லெபனானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் David Lammy தெரிவிக்கையில், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,
பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்படும் செய்தி என்னவெனில், உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்பதே என்றார். இதனிடையே, ஈரானுக்கு சென்றுள்ள தமது குடிமக்கள் தொடர்பில் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் சூழல் நெருங்கியுள்ள நிலையில், பிரான்ஸ் மக்கள் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரியுள்ளனர். லெபனானுக்கான விமான சேவைகள் ரத்தாகிவரும் சூழலில், அமெரிக்க குடிமக்கள், தாமதமின்றி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது ஜோ பைடன் நிர்வாகம்.
மிரட்டலுக்கு பணியப்போவதில்லை
பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவிக்கையில், லெபனானில் இருந்து புறப்பட விரும்புவோர் தங்களுக்குக் கிடைக்கும் டிக்கெட்டை முன்பதிவு செய்யுமாறு ஊக்குவிப்பதாகவும்,
அந்த விமானம் உடனடியாகப் புறப்படாவிட்டாலும் அல்லது அவர்கள் விரும்பும் வழியைப் பின்பற்றாவிட்டாலும் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொள்ள தாங்கள் தயார் என்றும் மிரட்டலுக்கு ஒருபோதும் பணியப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |