ரஷ்யாவின் தொடர் தாக்குதல்..கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் நிறுத்தம்
உக்ரைனின் கீவ் நகரத்தின் பல பகுதிகளில் ரஷ்யா தொடர் தாக்குதலை ஏற்படுத்தியது.
கீவ் மீது மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை இன்று அதிகாலை நடத்தியுள்ளது.
இதில் நகரின் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. இதன் காரணமாக அங்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ சேவைகள் அங்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
@t.me/mvs_ukraine(Official publication)
மேயர் அறிவிப்பு
இதுகுறித்து மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகையில், 'கீவ்வின் பல மத்திய மாவட்டங்களில் வெடிப்புகள் ஏற்பட்டன. மேலும், நீர் விநியோகம் தடைபட்டது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் வெடிகுண்டு முகாம்களாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களினால், உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
@Representational
@Ukrainian Emergency Service/AFP/Getty Images