இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் தர்பூசணி பதாகை.., இந்த குறியீட்டிற்கு காரணம் என்ன?
கடந்த 3 மாதங்களாக இஸ்ரேல் - ஹமாஸ் போரில் போராட்டக்காரர்கள் கைகளில் தர்பூசணி எமோஜி பதாகை வைத்துள்ளனர்.
தர்பூசணி எமோஜி
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் போராட்டக்காரர்கள் அணிந்திருக்கும் டி -சர்ட்களிலும், சமூக வலைதளங்களிலும் தர்பூசணி எமோஜி பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெட்டப்பட்ட தர்பூசணியின் முக்கோண வடிவிலான எமோஜியை பயன்படுத்துகின்றனர்.
இது, இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை குறிப்பதற்கு அவர்களது ஆதரவாளர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட வார்த்தைகள் காண்பிக்கப்படாது அல்லது குறைவாக காண்பிக்கப்படும். இதனை முறியடிக்கவே தர்பூசணி எமோஜியை பயன்படுத்துகின்றனர்.
அதாவது, பாலஸ்தீன கொடியில் உள்ள நிறங்கள் தர்பூசணியில் உள்ளது. இதில் சிவப்பு, பச்சை, வெள்ளை கருப்பு நிறங்கள் உள்ளது.
என்ன காரணம்?
இவர்கள் தர்பூசணியை குறியீடாக பயன்படுத்துவதற்கும் ஒரு வரலாறு உண்டு. 1967 -ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது பாலஸ்தீன கொடி காண்பிக்கப்பட்ட போது இஸ்ரேல் அதனை ஒடுக்கியது.
பின்னர்,1980 -ம் ஆண்டில் மூன்று ஓவியர்கள் ஒரு ஓவியத்தை காட்சிப்படுத்தினர். அதில் பாலஸ்தீன கொடியின் நிறங்கள் இருந்ததால் அந்த காட்சி முடக்கப்பட்டது. அதாவது அவர்கள் வரைந்த தர்பூசணியில் அந்த நிறங்கள் இருந்ததை குறிப்பிட்டு அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக அறிக்கை அனுப்பினர்.
இதனால், பொது இடங்களில் மக்கள் தர்பூசணியை குறியீடாக பயன்படுத்த தொடங்கினர். ஆனால், அவர்களை கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |