நாங்கள் விண்வெளியில் கைவிடப்படவில்லை: ட்ரம்ப் கூற்றுக்கு சுனிதா வில்லியம்ஸ் மறுப்பு
சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் விண்வெளியில் கைவிடப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியதற்கு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாங்கள் விண்வெளியில் கைவிடப்படவில்லை
விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் 258 நாட்களாக விண்வெளியில் கைவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அவரது நண்பரான எலான் மஸ்கோ, விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் 258 நாட்களாக விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளதன் பின்னணியில் முந்தைய ஜோ பைடன் அரசு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
The @POTUS has asked @SpaceX to bring home the 2 astronauts stranded on the @Space_Station as soon as possible. We will do so.
— Elon Musk (@elonmusk) January 28, 2025
Terrible that the Biden administration left them there so long.
அத்துடன், அவர்களை பூமிக்கு அழைத்துவருமாறு ட்ரம்ப் தன்னைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அவர்களை பூமிக்கு அழைத்துவர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
சுனிதா வில்லியம்ஸ் மறுப்பு
ஆனால், ட்ரம்பின் கூற்றுக்கு சுனிதா வில்லியம்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாங்கள் கைவிடப்பட்டதுபோலவோ, விண்வெளியில் சிக்கிக்கொண்டதுபோலவோ உணரவில்லை என்று கூறியுள்ள சுனிதா, இது பூமியில் இருப்பது போன்ற விடயம் அல்ல.
அது வித்தியாசமானது, உடனடியாக வீடு திரும்ப முடியாத நிலை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் சுனிதா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |