போரை நாங்கள் தொடங்கவில்லை, மேற்கத்திய நாடுகள் மீது பழி சுமத்தும் புடின்
மேற்கத்திய நாடுகள் தான் போரை கட்டவிழ்த்துவிட்டதாகவும், ரஷ்யா அதை நிறுத்த முயன்றதாகவும், அதிபர் புடின் தனது புதிய உரையில் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
புடின் உரை
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய மக்களுக்கு இன்று ஆற்றிய உரையில் இந்த போரை 'ரஷ்யா தொடங்கவில்லை' என்று கூறியுள்ளார்.
ரெட் சதுக்கத்திற்கு அருகில் உள்ள Gostiny Dvor மண்டபத்திற்கு வெளியே அவர் இன்று உரையாற்றினார்.
Reuters
'போரைத் தவிர்க்க முயன்றது ரஷ்யா'
அந்த உரையில், புடின் மீண்டும் இந்த போரை 'சிறப்பு இராணுவ நடவடிக்கை' என்றும், உக்ரைன் நிலைமையை 'இராணுவ சதி' என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்யா போரைத் தவிர்க்க முயன்றதாகவும், மேற்குலகம் தான் இந்தத் தாக்குதலை விரும்பியதாகவும், அமெரிக்க தலைமையிலான நேட்டோவை புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
போரைத் தவிர்க்க ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ததாகவும், ஆனால் மேற்கத்திய ஆதரவுடைய உக்ரைன் கிரிமியாவைத் தாக்க திட்டமிட்டு வருவதாகவும் புடின் கூறினார்.
பூதத்தை கிளப்பிய மேற்கு நாட்கள்
குழப்பம் மற்றும் போரை விதைப்பதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளில் போத்தலிலிருந்து பூதத்தை வெளியேற்றியதாக புடின் கூறினார்.
"உக்ரைன் மக்களே கிய்வ் ஆட்சி மற்றும் அதன் மேற்கத்திய எஜமானர்களின் பணயக்கைதிகளாக மாறிவிட்டனர் , அவர்கள் உண்மையில் இந்த நாட்டை அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார அர்த்தத்தில் ஆக்கிரமித்துள்ளனர்" என்று புடின் கூறினார்.
அதேநேரம், உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பது சாத்தியமில்லை என்றார்.